cropped tmk hmm logo

அரும்பாக்கம் பகுதியில் கடையில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்த கடையின் உரிமையாளர் கைது. 31.87 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல்.

அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று அரும்பாக்கம், அசோகாநகர் பகுதியிலுள்ள ஒரு கடையில் ரகசியமாக கண்காணித்த போது, அங்கு சட்ட விரோதமாக குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் சட்ட விரோதமாக குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் விற்பனை செய்த மேற்படி கடையின் உரிமையாளர் தன்ராஜ், வ/30, த/பெ. ஶ்ரீதர், பால விநாயகர் நகர் 1வது தெரு, அரும்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். மேற்படி கடையிலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல், எம்.டி.எம், ரெமோ உட்பட 31.87 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எதிரி தன்ராஜ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »