cropped tmk hmm logo

உடலில் ஆக்சிசன் அளவை அதிகரிக்கும் லிங்க முத்திரை சென்னை ஐஐ டி அங்கீகாரம்….

மதுரை – மனித உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க மதுரை சித்தா டாக்டர் சாலை ஜெயா கல்பனா கண்டுபிடித்த லிங்கம் முத்திரையை சென்னை ஐஐடி அங்கீகாரம் அளித்துள்ளது. உடலில் ஆக்சிசன் அளவு அதிகரிக்கும் காய்ச்சலை குறைக்கும் என மதுரை சித்திரவனம் மருத்துவமனை தலைமை மருத்துவர் சாலை ஜெய கல்பனா தன் கொரோணா தடுப்புமுறை ஆய்வில் கண்டறிந்தார்.

மேலும் அவர் கூறியது லிங்க முத்திரை ஆக்சிசன் அளவை அதிகரிக்கும் என ஐஐடி உறுதிப்படுத்தியுள்ளது. இதயம் நாடித்துடிப்பு சரியான முறையில் இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்தது. இதை ஆய்வு செய்த சென்னை ஐஐடி தொடு உணர்வு ஆய்வக தலைவர் மணிவண்ணன் சான்றிதழ் அளித்துள்ளார். மேலும் ஐஐடி சார்பில் சர்வதேச இதழ் ஒன்றில் ஆராய்ச்சி கட்டுரையையும் வெளியிட்டது.

லிங்க முத்திரை செய்வதால் உடல் வெப்பம் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டப் பெற்று வரும் நோய்கள் உள்ளிட்ட வைரஸ் கட்டுக்குள் வரும். ஆக்சிசன் அளவு கணிசமாக உயர்ந்து சுவாசம் சீராகும். கர்ப்பிணிகள் தவிர சிறுவர்கள் முதியோர், சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோயாளிகள், நோய் சிகிச்சை பெறுவோர் செயற்கை ஆக்ஸிஜன் இருப்பவர்களும் இந்த லிங்க முத்திரையை செய்யலாம்.

ஆள்காட்டி விரலை மூக்கின் அடியில் வைத்து மூச்சை கவனிக்கவும் எந்த நாசித்துவாரத்தின் குறைந்து மூச்சு வருகிறதோ அல்லது அடைத்துள்ளது அந்தப்பக்கம் உள்ள கை கட்டை விரலை செங்குத்தாக உயர்த்தவும் மற்றொரு கையில் ஆள்காட்டி கட்டை விரலால் உயர்த்தி பிடித்த கட்டை விரல் அடியில் சுற்றி வளைத்து இரு கைகளின் மற்ற விரல்களையும் கோர்க்கவும். இரு கைகளுக்கும் இடையே காற்று வாதப்படி இருக்கமாக பிடிக்கவும். இதை செய்ய தொடங்கி 5 முதல் 40 நிமிடத்தில் நெற்றி மூக்கு தொண்டை மார்பு பகுதி வெப்பம் அதிகரித்து வியர்க்கும்போது நிறுத்த வேண்டும். மேலும் இந்த லிங்க முத்திரையை கடைபிடித்தால் கொரோணா நோயை கட்டுபடுத்த முடியும் என்றார்.

Page 1 of 1 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »